அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் – பிரபல எழுத்தாளர் விருப்பம்

0

அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் என்று தி ஹைவே மாஃபியா நாவலை எழுதியிருக்கும் எழுத்தாளர் சுசித்ரா ராவ் கூறியுள்ளார். #TheHighwayMafia #Vijay #SuchitraRao

எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சுசித்ரா ராவ் எழுத்தில் உருவாகி இருக்கும் புத்தகம் தி ஹைவே மாஃபியா. கால்நடைகள் கடத்தலை மையப்படுத்தி உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
கால்நடை மாஃபியாவுக்கு எதிராக போராடும் தொழிலதிபர் அர்ஜூன் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகரும். அரசியல் கலந்த த்ரில்லர் பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்த கதையை எழுதியிருக்கும் சுசித்ரா ராவ் தெரிவித்துள்ளார்.

சரியான கதாபாத்திரங்கள் அமைந்தால் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக சில பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.
இந்த கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுசித்ரா, தமிழில் விஜய் தான் அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார். தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ் மற்றும் இந்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறினார். #TheHighwayMafia #Vijay #SuchitraRao

Leave A Reply

Your email address will not be published.