ஆங்கில புதுவருடம் மலர்ந்தது – நாடுமுழுவதும் கொண்டாட்டம்!

0

2019ஆம் ஆண்டு ஆங்கில புதுவருடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்துள்ளது.

மலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

மலர்ந்துள்ள புத்தாண்டை வரவேற்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

தலைநகர் கொழும்பில் பொன்னம்பலவாணேஸ்வரம், பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயில் மற்றும் தெஹிவளை விஷ்ணு கோயில் உள்ளடங்களாக பல ஆலயங்களில் நள்ளிரவு முதல் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அத்தோடு, கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன.

அதேபோன்று யாழ். நல்லூர் முருகன் ஆலயம், யாழ். புனித மரியன்னை தேவாலயம் உள்ளிட்ட சகல வழிபாட்டு தலங்களிலும் காலை முதல் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன

புதுவருடத்தினை வரவேற்கும் நள்ளிரவு ஆராதனைகள் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலும் இடம்பெற்றது.

அதேபோன்று மட்டக்களப்பு, கல்முனை போன்ற கிழக்கின் பல பகுதிகளிலுமுள்ள ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

புத்தளம் மாவட்டத்திலும் கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன. இவற்றில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு புத்தாண்டு ஆசிபெற்று வருகின்றனர்.

புதுவருடத்தைக் கொண்டாடும் சகல மக்களுக்கும் ஈழம் நியூஸின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.