இன்று முதல் இலங்கையில் சிமார்ட் அடையாள அட்டை!

0

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் இன்று முதல் விநியோகம்
புத்தாண்டு தினமான இன்று முதல் இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதனை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்தாரிகள் புதிய அடையாள அட்டைகளுக்கான ஒளிப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு அனுமதிப்பெற்ற ஒளிபடப்பிடிப்பு நிலையங்களிலேயே ஒளிப்படங்கள் எடுக்கப்படவேண்டுமெனவும், ஒளிப்படத்திற்கான பற்றுச்சீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டுமென்றும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் நாடு முழுவதிலும் 2100 ஒளிப்பட நிலையங்கள், இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.