இராணுவம் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய காணிகள் விடுவிப்பு !

0

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் பயன்படுத்திய அரச மற்றும் வனவளத் திணைக்கள காணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலக ஜயம்பதி கிராம சேவகர் பிரிவின் வனப்பதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 479 ஏக்கர் காணிகளும்,

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதயர்காட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவின் வனப்பதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 120 ஏக்கர் காணிகளும் இதில் அடங்கியுள்ளது.

மேலும் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலக வெள்ளங்குளம் கிராம சேவகர் பிரிவின் வனப்பதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 500 ஏக்கர் காணிகளுமே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.

இக்காணிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்களுக்கு காணிகள் தொடர்பான ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.