இராணுவ பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம் – எச்சரிக்கும் அமெரிக்கா!

0

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு தலைவர்  எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

”போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களில் முக்கிய பங்கு வகித்தார் என்று ஐ.நாவினால் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்துகிறது.

இது அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

போர்க்குற்றவாளி என்று ஐ.நா நம்புகின்ற ஒருவரை, இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்துள்ள நிலையில், போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூற வைப்பதில் உங்களின் நேர்மை எப்படி நிரூபிக்கப்படும்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.