இராணுவ வாகனம் மோதி கோர விபத்து கிளிநொச்சியில் மூவர் பலி!

0

கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மற்றுமொரு சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு உயிரிழந்தவர்கள் பளை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.