இலங்கையில் இடம்பெறும் பாரிய குற்ற செயல்களின் பின்புலத்தில் யார்? வெளிப்படுத்திய மகிந்த

0

பாதாள உலகக் குழுக்கள் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றின் ஊடாக அவர் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாதாள உலகக் குழுக்களை சில அரசியல்வாதிகளே பாதுகாக்கின்றனர் என சுட்டிக்காட்டிய அவர் பாதாள உலகக்குழுச் சந்தேக நபர்கள் தொடர்பில் காவல்துறையினர் இதனை விடவும் கவனம் செலுத்த முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொலிசாரில் சிலரும் பாதாள உலகக்குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்றே தோன்றுகிறது என்றும் கூறினார்.

இலங்கைக்கு கேரள கஞ்சா போதைப்பொருள் பாரியளவில் தருவிக்கப்படுவதாகவும், சந்தேக நபர்களை சில அரசியல்வாதிகள் மீட்டு வருவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.