இலங்கை பெண்களே எச்சரிக்கை! குளியலறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி !

0

வெல்லவாய பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் கழிப்பறைக்குச் சென்ற யுவதியை இரகசியமான முறையில் படம் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டு யுவதி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த சுற்றுலா விடுதியில் பணி புரிந்த இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வெளிநாட்டு யுவதி கழிப்பறைக்கு செல்லும் வரை காத்திருந்து, கழிப்பறை கதவின் அருகாமையில் சென்றுள்ளார்.

கதவின் அருகாமையில் கைபேசியினை இரகசியமான முறையில் வைத்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் சம்பவம் குறித்து, இந்திய நாட்டு யுவதி சுற்றுலா விடுதி முகாமையாளரிடம் முறையிட்டுள்ளார். இந்த நிலையில், சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பதுளை – கொஸ்வத்த பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.