எந்தவொரு நீதிமன்றத்திலும் இலங்கை இராணுவ படையினர் நிறுத்தப்படார் ! நீதி அமைச்சர் உறுதி

0

நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவ தற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கஹவத்தையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நாங்கள் எப்போதும் பெளத் தத்தை மதிக்கிறோம். நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்தவொரு நல்ல பெளத்தருமோ, அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியுமோ விரும்பவில்லை.நாட்டில் நிலவிய மோசமான போரை, தமது வியர்வை யையும் இரத்தத்தையும் சிந்தி முடிவுக்கு கொண்டு வந்து, நாட் டைப் பாது காத்த போர் வீரர்களை எந்த வொரு நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்வற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

இவையெல்லாம் பொய்யான பரப்புரைகள். அத்துடன் பெரும் நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணை களை மேற்கொள்ளும் இரண் டாவது விசேட மேல் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் நிறு வப்படும். விசேட நீதிமன்றுக்கான நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த விசேட நீதி மன்றத்தை நிறுவ பொருத்த மான இடம் கிடைக்காதமையே தாமதத்துக்கு பிரதான காரண மாகும்.

நீதிமன்ற சேவை அமைப்புச் சட்டமூலத்தின் பிரகாரம் நீதி அமைச்சர் என்றவகையில் எனக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் இந்த விசேட நீதிமன்ற அமைப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு வரு கின்றேன்.முதலாவது விசேட நீதிமன் றம் புதுக்கடை நீதிமன்ற வளா கத்தில் அமைக்கப்பட்டு தற்போது வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. எனினும் இரண்டாவது நீதி மன்றம் அமைய விருக்கும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.