கற்றாழைகளை களவெடுக்க வந்த சிங்களவர்கள் விரட்டியடிப்பு!

0

அனுமதியின்றி கற்றாழைகளை பிடுங்கியவர்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து விரட்டியடித்துள்ளனர். யாழ்.பொன்னாலை கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட கற்றாழைகளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கையை சேர்ந்த சிலர் பிடுங்கி தமது பட்டா ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர்.

அதனை அவதானித்த சில இளைஞர்கள் அது தொடர்பில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசாவுக்கு அறியப்படுத்தினர்கள். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மேலும் சில இளைஞர்கள் , கற்றாழைகளை பிடுங்கியவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் போது தாம் அனுமதி பெற்றே பிடுங்குவதாக தெரிவித்துள்ளனர். அனுமதி பத்திரத்தை காட்டுமாறு கேட்ட போது அதனை அவர்கள் காட்டமையால், அவர்கள் பிடுங்கி ஏற்றிய கற்றாழைகளை பறிமுதல் செய்த இளைஞர்கள் அவர்களை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசா தெரிவிக்கையில் ,

வெளியிடங்களில் இருந்து எமது பிரதேசங்களுக்கு வந்து எமது வளத்தை சூறையாட நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அது தொடர்பில் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். இனிவரும் காலத்தில் எமது பிரதேச வளங்களை சூறையாட முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.