காளிகோயிலை இடித்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கை ஒப்படைத்த மைத்திரி!

0

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர்

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நியமனத்தின் ஊடாக கிழக்குமாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

இனவாத சிந்தனை கொண்டு செயற்படும் ஒருவரை அதுவும் கடந்த காலங்களில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது இருப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டமாவடி காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை கட்டியது நீதிபதியை மாற்றி நீதிமன்ற தீர்ப்பை மாற்றியது தமிழர்களின் காணி அபகரிப்பிற்கு துணைபோனது மத ரீதியான பல்கலைகழகத்தை அமைத்தது புல்லுமலை பிரதேசத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு உதவியமை ரிதிதென்ன பல்கலைக்கழகத்திற்கு சட்டவிரோதமான இயந்திரங்களை களவாடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒருவரை ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடாகவே நோக்கப்படுகிறது.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதன் ஊடாக யுத்தத்தாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மேலும் துன்பத்திற்குள் தள்ளியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதற்காக அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.