கிரிக்கெட் வரலாற்றில் மீண்டும் ஒரு அரிய சாதனை படைத்த விராட் கோலி ! அதிரும் கிரிக்கெட் உலகம்

0

சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து 19,000 ரன்கள் என்ற மைல்கல்லை அதிவேகமாக எட்டிய முதல் வீரர் ஆனார் கோஹ்லி.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–1 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில் கோஹ்லி 11 ரன்கள் எடுத்த போது சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து 19,000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார்.

இதை அதிவேகமாக எட்டிய வீரர்களில் சச்சினை (432 இன்னிங்ஸ்) பின் தள்ளி முதல் வீரர் ஆனார் கோஹ்லி (399 இன்னிங்ஸ்). அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் லாரா (433), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (444), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (458) உள்ளனர்.

இதற்கு முன் 15,000 (333), 16,000 (350), 17,000 (363), 18,000 (382) ரன்களை அதிவேகமாகத் தான் எட்டி இருந்தார். இவர் 77 டெஸ்டில் 6,613, 216 ஒருநாள் போட்டிகளில் 10,232, 65 ‘டுவென்டி20ல் 2,167 என 358 போட்டிகளில் (399 இன்னிங்ஸ்) மொத்தம் 19,012 ரன்கள் எடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.