கிளிநொச்சியில் மக்களுக்கு சபாநாயகர் இன்று வழங்கிய மகிழ்ச்சி செய்தி !

0

வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றிருந்தால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரச ஊழியர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்திலும் பயனாளிகளை தெரிவு செய்வதிலும் குழப்பங்கள், மற்றும் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருந்த நிலையில் அதற்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் இன்றைய தினம் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22, 563 குடும்பங்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவ் அறிவிப்பானது பாதிக்கப்பட்ட சகல மக்களிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.