குஷ்பு கூட மோடியை கலாய்க்கும் நிலை!

0

தமிழகத்தில் பா.ஜா.க.வுக்கும் மோடிக்கும் துளியும் இடம் கிடையாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் தாமரை மலராது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டரில், “எப்போதும் பிரதமர் மோடி தமிழகத்தில் கால்வைக்க வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் எல்லோரும் சேர்ந்து ‘Go Back Modi’ என கூறுகிறார்கள்.

இதிலிருந்து ஒரு வி‌டயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதாவிற்கும், பிரதமர் மோடிக்கும் துளி கூட இடம்கிடையாது. தமிழகத்தில் தாமரை மலராது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிவைத்துள்ள நிலையில் குஷ்பு இவ்வாறு விமர்சனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இ

Leave A Reply

Your email address will not be published.