கோர விபத்தில் சிக்கிய மைத்திரியின் பாதுகாப்பு கமாண்டோ வாகனம்! பலத்த கெடுபிடி! படங்கள் இணைப்பு

0

முல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் இராணுவ கமாண்டோ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்து வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

தட்டாமலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே இந்த வாகனம் விபத்துக்காகியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

எனினும் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஐவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியின் கொமாண்டோ வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி!

on: January 21, 2019No CommentsPrintEmail

மைத்திரியின் கொமாண்டோ வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி!

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கொமாண்டோ படையணி பயணித்த வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி நிலைமை உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – தட்டாமலைப் பகுதியில் இன்று மதியம் இராணுவ வாகனம் விபத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இவ்வாறான நிலையில் அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் பலத்த கெடுபிடி நிலைமை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் விபத்திற்கு இலக்கான இராணுவ வாகனத்தின் பாகங்கள் குறித்த பகுதியில் சிதறி காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

தற்போது அந்த இடத்தில் புகைப்படங்களை எடுப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.