சபரிமலை விவகாரம்! பாதி மீசையை எடுத்த நபர் ! யார் இந்த வினோத மனிதன் தெரியுமா ?

0

ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 28ம் திகதி ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை அறிவித்தது.

இதனை தொடர்ந்து பெண்கள் நுழைய முயன்ற போது போராட்டம் வெடித்தது.

அந்நேரத்தில் கேரள மாநிலம், மன்னார் மாவட்டத்தில் இருக்கும் ராஜேஷ் குருப் என்பவர் சபரிமலை ஐயப்பன் சிலையை நெஞ்சில் வைத்திருப்பது போலவும், காவல் துறையினர் அவரை காலால் எட்டி உதைப்பது போலவும், கழுத்தில் அரிவாள் வைத்திருப்பது போலவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலானது.

கடைசியில் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்றும், போலியாக புகைப்படங்களை போட்டோஷாப் செய்திருந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து நடை சாத்தப்பட்டது.

இன்று கேரளாவில் பந்த் நடந்துவரும் நிலையில், ராஜேஷ் குருப் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.