சம்பந்தனை பற்றி கதைக்க உமக்கு அருகதை இல்லை !நடுவீதியில் மல்லு கட்டிய கருணா மற்றும் யோகேஸ்வரன்!

0

சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கூட்டமைப்பே பிரதான முக்கிய காரணம் என கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி விவசாயிகளால் நேற்று செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

இன்று அமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள், ஆளுநர்க இருப்பவரும் முஸ்லிம். இதற்கு முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைதான் குற்றம் சாட்ட வேண்டும்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வெளிப்படையான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தை குழித் தோண்டி புதைத்து விட்டு இன்று அமைதியாக இருக்கின்றார்கள் என்றும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இரா.சம்பந்தனுக்கு எதிராக பேச உமக்கு அருகதை இல்லை என கருணாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

அத்துடன், யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில், நான் அவர்களின் உறவுகளை கொண்டு உமக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் இதன் போது எச்சரித்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.