சூப்பர் ஸ்டார் ரஜனியை கிண்டலடித்த முத்தையா முரளிதரன் ! கொந்தளிப்பில் ரஜனி ரசிகர்கள் ! வைரலாகும் வீடியோ

0

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன்,தனது அரசியல் வருகையைக் குறித்து செய்தியாளரிடம் பேசும் போது சூப்பர் ஸ்டார் ரஜனிக்காந்தை கிண்டலடித்துப் பேசும் வீடியோக்காட்சி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே மலையகப் பகுதி மக்களின் நலன்களுக்கான சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்ற முத்தையா. முரளிதரனிடம் ஹட்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வி மற்றும் மலையக மக்களிடம் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கும் விதம் பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அந்த கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கையில். அவருடைய அரசியல் வருகை பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு கிண்டலாக பதிலளித்த முரளிதரன். இந்தியாவில் ரஜினிகாந்த் சொல்வது போலதான் வர்றனா? வரலையா? வர்றனா? வரலையா? அந்த மாதிரிலாம் நாம பண்றது இல்ல. நமக்கு அரசியல்ல விருப்பம் இல்லை என்பதைத் தெரிவித்துள்ளார்.இது குறித்த வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைத்தளத்தில் பரவிக்கொண்டிருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.