சென்னை பல்கலைக்கழகத்தில் நடுகல் நாவலுக்கு அறிமுகவிழா!

0

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு, இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிமுகவிழா இடம்பெறவுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வை இதழியல் மற்றும் தொடர்பில் துறையின் திண்ணை இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் ஈழ எழுத்தாளர் அகரமுதல்வன், பேராசிரியர்களான ராமு மணிவண்ணன், கோபாலன் இரவீந்திரன் ஆகியோரும் நாவல் பற்றி உரையாற்றுகின்றனர். சிறப்புரைகளை தொடர்ந்து வருகையாளர்களின் நாவல் குறித்த அனுபவப் பகிர்வும் இடம்பெறவுள்ளது.

2019 – சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த நாவல், போருக்குள் பிறந்து வளரும் ஒரு சிறுவன் தனது கதையை பேசும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் வெளியாக ஒரு சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் இந்த நாவல் கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.