டாப்சியை கோபப்படுத்திய செல்போன் நிறுவனம்

0

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியை பிரபல செல்போன் நிறுவனம் கோபப்படுத்தி இருக்கிறது. #Taapsee

ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். இந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார். டாப்சி சரியாக சிக்னல்கள் கிடைப்பதில்லை என்றும் அதிக விலை வைத்து ஏமாற்றுவதாகவும் முன்னணி செல்போன் நிறுவனத்தை கடுமையாக டுவிட்டரில் சாடியுள்ளார்.

அவர் அந்த நிறுவனத்தை குறிப்பிட்டு அவர்கள் தங்கள் சேவையை நிறுத்திவிட்டுக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது அல்லது அவர்கள் அதிக விலை வைப்பதை நிறுத்தவேண்டும். சிக்னல்கள் எங்கும் கிடைக்காத நிலையை மாற்ற வேண்டும். நாம் இப்போது போன்களை அதிக அளவு சார்ந்து இருப்பதால் எப்படியெல்லாம் வாடிக்கையாளராகிய நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.

இது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் விரைவில் தங்கள் குழு தொடர்புகொண்டு பிரச்சனையை தீர்க்கும் என்றும் அந்த நிறுவனம் பதிலளித்தது. இந்த டுவிட்டுக்கு கீழே மக்கள் பலரும் தாங்களும் இதைப் போன்று பாதிக்கப்பட்டதாக தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். பலர் மற்ற நிறுவனங்களையும் டேக் செய்து பிரச்சினைகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.