தனது இயலாமையை வெளிப்படையாக ஏற்று கொண்ட ஜனாதிபதி மைத்திரி ! அதை தானே அந்த ட்ரெயிலரும் சொன்னான்

0

ஊழல், மோசடியை ஒழிக்க அரசாங்கத்தால் முடியாது போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடியை ஒழிப்பதற்கு 4 வடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தால் முடியாது போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

லக்கல புதிய நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டப் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

என்னைத் தெரிவு செய்து முழுமையாக 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த 4 வருடத்தில் மக்களின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. சுதந்திரமும் பலப்படுத்தப்பட்டது.

ஊடக சுதந்திரம், நீதிமன்றம் சுயாதீனமாக்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்பட்டது. பல நன்மைகளைப் போலவே சில தோல்விகளும் ஏற்பட்டது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.