தமிழரின் கழுத்தை அறுப்பேன் என்று சைகை காட்டிய இலங்கை இராணுவ அதிகாரியை கைது செய்யுமாறு பிடியாணை ! பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி

0

இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது , அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரியங்க பெர்னான்டோ கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதன்படி வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளி எனத் தெரிவித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள லண்டனிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அவர் இராஜதந்திர அதிகாரியெனவும் ஐ.நா வியானா பிரகடனத்திற்கு அமைய அவருக்கு சிறப்புரிமைகள் இருப்பதாகவும் இதன்படி அவருக்கு எதிராக இவ்வாறாக வழக்கு தொடரவோ அல்லது தண்டனை வழங்கவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை அவர் தற்போது அங்கு வசிக்கவில்லையெனவும் இதனால் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கான சட்ட முறைமைகள் இல்லையெனவும் உயிரிஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.