தமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கர்கள் தான் தமிழ் மண்ணின் மைந்தர்கள் – மதிமுக உறுப்பினர் சர்ச்சைப் பேச்சு.!

0

கோவையில் தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சி பேரவையின், கோவை மண்டல மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

கம்மவார்நாயுடு சமூகம் அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதில் அதிக கவனம் செலுத்தி, பிரதிநித்துவம் பெற வேண்டும் என்ற ரீதியில் இந்த மாநாடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மேற்காண் மாநாட்டில் பேசிய மதிமுகவைச் சேர்ந்த தனமணி வெங்கட் என்ற பெண் உறுப்பினர், தெலுங்கு நாயக்கர்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள் எனவும், தமிழர்கள் லெமூரியா கண்டத்திலிருந்து வந்ததாகவும் தமிழர்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

அதேசமயம், தனமணி வெங்கட் தமிழர்களை இழிவாக பழித்து பேசியது தொடர்பான காணொளி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி தமிழர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் ஆட்சி – அதிகாரத்தினை பிற மொழியாளர்களிடத்தில் இழந்துவிட்டதன் காரணத்தினாலேயே இன்றைக்கு சொல்லொணா இன்னல்களையும், துயரங்களையும் அனுபவித்து, தொன்மைசார் எம் தமிழினம் வலி சுமந்து நிற்கிறது என்ற தமிழ்தேசியர்களின் கருத்தாக்கத்தினை மெய்ப்படுத்தும் விதத்தில் தமிழகத்திற்குள்ளேயே தமிழர்களை வந்தேறிகள் என மதிமுகவினர் பேசியிருப்பது பொதுமக்களையும், இளையோர்களையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.