தமிழ் தேசத்தை அழிக்க நினைத்த எதிரிகள் முதலில் புத்தகங்களை எரித்தார்கள்; சுரேன் ராகவன் மறைமுக கருத்து!

0

PrintReport84SHARES

தமிழ் தேசத்தை அழிக்க நினைத்த எதிரிகள் முதலில் புத்தகங்களை எரித்ததாக, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியாளர்களை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமான திகழ்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

யாழ்ப்பாணம் – வேம்படி கல்லூரியில் 249 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 33 தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களுக்கும் நியமனம் வழங்கிவைக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆளுநர் சுரேன் ராகவன், ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் அரங்கேற்றப்பட்ட யாழ் நூலக எரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.