திருச்சியில் அர்ஜுன் சம்பத் கட்சியினரை வெளுத்த விடுதலைச் சிறுத்தைகள்.!

0

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஈந்தளித்த இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழி நடவாமல், இந்துத்துவ சனாதன கோட்பாடுகளின் வழி நடைபெறுகிற நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை வீழ்த்திட அரசியல் மாச்சரியங்கள், தேர்தல் லாபங்கள் உள்ளிட்டவற்றை கடந்து நாடு முழுவதும் உள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டுமென்ற முழக்கத்தை முன்வைத்து தேசம் காப்போம் மாநாட்டினை திருச்சியில் நடத்தி முடித்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா.

தேசிய, மாநில தலைவர்கள் பலர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் விசிக தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியினர் வம்பு வளத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இந்து மக்கள் கட்சியினரை அவர்கள் பாணியிலேயே விசிகவினர் எதிர்கொண்டுள்ளனர்.

தேசம் காப்போம் மாநாடு முடிவுற்ற போதிலும் தங்களது கட்சியினரை விசிகவினர் தாக்கிவிட்டார்கள் என முகநூலில் புகார் தெரிவித்துவருகிறார் அர்ஜுன் சம்பத். முன்னதாக, இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட தேசம் காப்போம் மாநாட்டினை நடைபெறவிடாமல் தடுக்கவும், அதில் பங்கெடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பவும் இந்துத்துவ சக்திகளான ஆர்எஸ்எஸ், பாஜகவினர் முயன்றதாக இடதுசாரிகள் உள்ளிட்டோர் தெரிவித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.