திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்

0

சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம். #Viswasam #Petta

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. இந்த இரு படங்களுக்கும் திரையரங்குகளை ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

எனினும் இரு படங்களுக்குமே சம அளவிலான திரையரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் தணிக்கை சான்றிதழின் படி, படத்தின் நீளம் 2 மணி 32 நிமிடம் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஒரு நாளில் பல காட்சிகளை திரையிட முடியும் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனராம்.

அதேநேரத்தில் ரஜினியின் பேட்ட படத்தின் நீளம் (2 மணி 51 நிமிடம்) அதிகம் தான் என்றாலும், அது ரசிகர்களை தொய்வு செய்யாது என்றும் கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் டிரைலர்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையில் இந்த இரு படங்களை தவிர்த்து வேறு எந்த படமும் ரிலீசாவது இன்னமும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Viswasam #AjithKumar #Petta #Rajinikanth

Leave A Reply

Your email address will not be published.