நடுகல் ஈழ நாவல் வெளியீட்டு வைத்த நடிகர் பொன்வண்ணன்!

0

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் இடம்பெற்றது. சென்னை, கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பலஸில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

2019 – சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த நாவல் தமிழகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற புத்தக விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கவிதா பாரதி தலைமையில் நடைபெறும் சிறப்பு வருகையாளராக இயக்குனரும் நடிகருமான பொன்வண்ணன் வெளியிட்டு வைத்தார்.

இதேவேளை இந்த நிகழ்வில், இயக்குனர் மீரா கதிரவன், தமிழக கவிஞர் மண்குதிரை, ஊடவியலாளர் செல்வ புவியரசன், எழுத்தாளர்களான இளங்கோவன் முத்தையா, அகரமுதல்வன் ஆகியோரும் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

போருக்குள் பிறந்து வளரும் ஒரு சிறுவன் தனது கதையை பேசும் வகையில் அமைந்துள்ள இந்த நாவல், வெளியாக ஒரு சில நாட்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் இந்த நாவல் கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.