நள்ளிரவில் அங்கு மறைத்து வைப்பேன்..பகலில் அதை பார்ப்பேன்! நர்ஸ்களை வீடியோ எடுத்த இளைஞனின் பகீர் வாக்குமூலம்

0

சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் நர்ஸ்கள், பெண்கள் உடை மாற்றும் அறைகளில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த துப்புரவுப் பணி சூப்பர் வைஸர் பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டை, அண்ணாசாலையில் சிறுநீரக கோளாறு தொடர்பான சிகிச்சைக்கு பிரபலமான தனியார் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.இந்த மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் சிவபிரகாஷ் தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோ பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிவபிரகாஷிடம் பொலிசார் விசாரித்த போது, பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் தன்னுடைய செல்போனை ஆள் இல்லாத நேரங்களில் வைப்பேன். பெரும்பாலும் எனக்கு இரவுப் பணி என்பதால் செல்போனை நள்ளிரவில் வைப்பேன்.மறுநாள் அதை எடுப்பேன். அதில் நர்ஸ்கள், பெண்கள் உடைமாற்றும் காட்சிகள், அவர்கள் பேசும் ஆடியோக்கள் பதிவாகியிருக்கும்.

அதை பகலில் பார்ப்பேன், என்னுடைய அற்ப சந்தோஷத்துக்காக இப்படி செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளார்.இதையடுத்து சிவபிரகாஷிடம் இருந்த செல்போனை கைப்பற்றிய பொலிசார், அந்த போனை ஆய்வு செய்தால் இன்னும் சில வீடியோக்கள் கிடைக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் துப்பரவுப் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த நிறுவனத்தில், பட்டதாரியான சிவபிரகாஷ் சூப்பர்வைஸராக பணியாற்றியுள்ளார். இவர், மருத்துவமனையில் உள்ள எல்லா அறைகளுக்கும் செல்வார்.

அப்படி ஒரு முறை பெண்கள் பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறைக்கு சென்ற போது பெண் ஒருவர் உடை மாற்றியுள்ளார். இதைக் கண்ட பின்னரே அவருக்கு ஆசை வந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.