நாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன் வாசுதேவவும் இவர்தான்!

0

வடக்கு கிழக்கு அமைச்சு-  தமிழீழம் ஆகுமா?

தமிழர்கள் தமிழீழத்தை கைவிட்டாலும் சிங்களவர்கள் தமிழீழத்தை கைவிட மாட்டார்கள். சிங்களப் பேரினவாத அரசும், சிங்களப் பேரினவாதிகளும் தமிழீழத்தை கைவிடமாட்டார்கள். ஈழத் தமிழ் மக்களை காட்டிலும் இன்று அதிகம் தமிழீழம் பற்றி பேசுபவர்கள், சிங்களவர்கள்தான். சிங்களப் பேரினவாதிகளின் அரசியலுக்கு தமிழீழம் மிகுந்த அவசியமாகின்றது. அதுததான் அவர்களின் எதிர்கட்சி. அதுதான் அவர்களின் எதிரிநாடு.

இப்போது மீண்டும் தமிழீழம் பற்றிய பேச்சுக்கள் உலாவரத் தொஙட்கியுள்ளன. தமிழ் தலைமைகள் கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்து விட்டது. தமிழீழம் வேண்டாம் என்று. உயர் நீதிமன்றத்தில் சென்று சத்தியக்கடாதாசியும் வாசித்துவிட்டது தமிழீழம் வேண்டாம் என்று. ஆனால் இன்னமும் சிங்கள கட்சிகள் தமிழீழத்தை மறக்கவில்லை. தமிழீழம் பற்றிப் பேசினால்தான் அவர்களுக்கு உறக்கமும் வருமானமும் வருகின்றது. 

பவித்திரா வன்னியாராச்சி. மகிந்தவின் தீவிர விசுவாசி. அடி முட்டாள். 2015இல் மகிந்த ராஜபக்ச வெல்லாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து வீடு செல்வேன் என்று சொன்னவர். வெறும் வாய்ச் சொல் வீரர். பதவியை துறக்கவும் இல்லை. சொன்னதை காப்பாற்றவும் இல்லை. இப்போது மகிந்தவுக்காக அவருக்கும் தமிழீழ கனவு வருகின்றது. சம்பந்தரும், ரணிலும், கருஜெயகூரியவும் இணைந்து தமிழீழ நாட்டை ஸ்தாபிக்க முயற்சியில் ஈடுபடுகின்றனராம். 

ரணில், தெளிவாக சொல்லிவிட்டார். ஒற்றையாட்சிதான். வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை. பௌத்திற்கு முன்னுரிமை. இதையெல்லாம் சொன்ன பிறகும் புதிய அரசியலமைப்பை தமிழீழ அரசியலமைப்பு என்று சொல்வது எவ்வளவு அநியாயம்? புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அபிலாசைகள் புறந்தள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு அவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில், எதுவும் இல்லாத அரசியலமைப்பை சிங்கள இனவாதிகள் எதிர்கின்றனர். 

எதுவும் இல்லாத அரசியலமைப்பு என்றாலும் எதிர்ப்போம், எதுவும் இல்லாத அரசியல் தீர்வு என்றாலும் எதிர்ப்போம் என்பதே சிங்களப் பேரினவாதிகளின் அடிப்படை. ஈழத் தமிழ் மக்களை எப்போதும் எதிர்ப்பதும், அவர்களை அழித்து ஒழிப்பதமே சிங்களப் பேரினவாததிற்கு இஷ்டமான விசயம். பவித்திராவின் கதையும் நிலையும் இப்படி இருக்க, வாசுதேவ நாணயக்காரவின் நாணயம் இல்லாத செயற்பாட்டைப் பாருங்கள். இவர் ஒரு காலத்தில் ஹெலகப்டரில் வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளை சந்தித்த நபர். 

ஆம், அவர் உண்மையான இடதுசாரியாக இருந்த காலம் அது. விடுதலைப் புலிகளின் கொள்கை நியாயமானது என்று ஏற்றிக் கொண்டிருந்த காலம். விடுதலைப் புலிகளை ஆதரித்து தீவிரமாக பேசியிருந்தார். அந்நாட்களில் வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளை சந்தித்தார். புலிகளுக்கு ஆதரவுகளை தெரிவித்தார். அவர்தான் இனறு புலிகள் தொடர்பில், தமிழீழம் தொடர்பில் கொலைவெறித்தனத்தை வெளிப்படுத்துகின்றார். 

அண்மையில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சுக்களை தனித்தனியான அமைச்சுக்களாக இல்லாமல், வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சு என்று தனி அமைச்சாக உருவாக்க வேண்டும் என்று சுமந்திரன் ரணிலை வலியுறுத்தினார். வடக்கு கிழக்கு தனி அபிவிருத்தி அமைச்சு அமைத்துவிட்டால், தமிழீழத்தை எடுத்துவிட்டோம் என்று தமிழி் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தோற்றத்தை காண்பிக்க முயற்சிப்பதபோலவே அதை வாசுதேவ நாணக்காரவும் பார்க்கிறார். 

அதை வைத்து மகிந்தவுக்கு அரசியல் செய்யப் பார்க்கிறார்.  இது வடக்கு கிழக்கை இணைப்பதற்கான அத்திவாரமாம். அடிக்கல்லாம். வாசுதேவ புலம்புகிறார். ஒரு காலத்தில் நாணயமான வாசுதேவ, புலிகளை சந்தித்து ஆதரவளித்து, மகிந்தவின் தோழன் ஆகி படு இனவாதத்தை கக்கும் வாசுதேவ. இப்படி மகிந்தவின் அடிவருடிகள், எடுத்ததிற்கு எல்லாம் தமிழீழம் பேசுகின்றனர். எல்லாவற்றையும் தமிழீழம் என்கின்றார். ஒரு அரசில் அமைச்சுக்கள் உருவாக்கப்படும், பிறகு அழிக்கப்படுவதும் வழமை.

அரசியல் யாப்பின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கையே பிரித்தவர்கள் சிங்கள இனவாதிகள். ஒரு அமைச்சிற்காக துள்ளிக் குதிக்கின்றனர். தமிழீழம்தான் சிங்கள அரசியல் வாதிகளுக்கு தூக்கத்தை கொடுக்கிறது. நாம் தான் எமக்கு அவசியமான தமிழீழத்தை விட்டு ஒதுங்குகிறோம். உண்மையில், எதற்குமே சிங்களம் தயாரில்லாதபோது, நாம் தமிழீழத்திற்கு தயாராக வேண்டும். எமக்குரிய தமிழீழத்தை சிங்களப் பேசித் திரியும்போது, நாம் ஏன் பேசக்கூடாது, தமிழீழத்திற்கான போராட்டமாக?.


ஆசிரியர், ஈழம்நியூஸ். 20.01.2019.

Leave A Reply

Your email address will not be published.