பலாலி இராணுவ முகாமில் நடந்த அசம்பாவிதம் ! நடந்தது என்ன ?

0

இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞன் ஒருவர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுளள சம்பவம் யாழ் பலாலி இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர் பலாங்கொடையைச் சேர்ந்த என்.ஜி. வை. ஆரியரட்ண (வயது 22) என்பவர் எனக் கூறப்படும் அதேவேளை இராணுவ முகாமில் உள்ள மரமொன்றில் நேற்று (புதன்கிழமை) மாலை தூக்கிட்டு உயிரை மாய்த்துளளார்.

இதேவேளை குறித்த இளைஞனின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இந்த தற்கொலை தொடர்பான விசாரணைகளை பலாலி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.