பிரபல பெண்மணிக்கு பயந்து நடுங்கும் மைத்திரி! நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மாற்றம் ! காரணம் என்ன ?

0

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் ரீதியாக முன்னெடுத்து வரும் காய்நகர்த்தலின் காரணமாக இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முழு அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சந்திரிக்கா குமாரத்துங்க ஈடுபட்டுள்ளார்.

இதற்கான பல்வேறு மந்திராலோசனைகள் கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திரிக்கா மேற்கொண்டுள்ளார்.

சுதந்திர கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக தனக்கு நெருக்கமான நபர் ஒருவரை கட்சியின் பொதுச் செயலாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நடந்த சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் நடந்த கூட்டத்தில், தற்போதைய பொதுச்செயலர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர கட்சியின் பெருமளவு உறுப்பினர்கள் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். அவ்வாறான செயற்பாட்டினை தடுக்கும் வகையில் ஜனாதிபதியின் அதிரடி செயற்பாடு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்து வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் தீவிர முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.