பிறந்து ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தாய் ! இலங்கையில் நடந்த சம்பவம்

0

பிறந்து ஒரு மாதமான குழந்தையை உயிருடன் வீட்டு தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் யூனிப்பீல்ட் தோட்டத்தில் வசித்து வரும் 28 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இந்த பெண் நேற்று முற்பகல் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க செய்துள்ளார்.

இதன் பின்னர், குப்பைகளை போட வெட்டப்பட்டிருந்த குழிக்குள் குழந்தையை வைத்து மண்ணை போட்டு மூடியுள்ளார்.

குழந்தை வீட்டில் இல்லாத காரணத்தினால், பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் குழந்தை பற்றி பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது தான் குழந்தையை குழிக்குள் போட்டு புதைத்து விட்டதாக பெண் கூறியுள்ளார். இதன் பின்னர், பெண்ணின் தாயும், உறவினர்களும் இணைந்து குழந்தையை தோண்டி எடுத்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பால் கொடுக்கும் போது குழந்தை இறந்து விட்டதாக அவர்கள் வைத்தியசாலையில் கூறியுள்ளனர். எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குழந்தையின் கழுத்து பகுதியில் மண் இருப்பதை கண்டு அது பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.

தனது கணவருடன் சுமார் ஒரு மாத காலமாக இருந்து வரும் தகராறு காரணமாக குழந்தையை உயிருடன் புதைத்ததாக பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கணவன், கண்டியில் தொழில் புரிந்து வருகிறார்.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனை டிக்கோயா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.