புதிய அரசியலமைப்பு நடவடிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லுப்போன்றது – சிவசக்தி

0

புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லுப்போல அசையாது உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

வவுனியா வடக்கைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், “கடந்த 3 வருடங்களாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாகக் கூறி புதிய அரசியலமைப்புக்கு கட்சிகளினால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அது வெறுமனவே கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கப்போகின்றதே தவிர அந்த புதிய அரசியலமைப்பானது நாடாளுமன்றத்திலே முன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளப்போவதுமில்லை. அதற்குப் பிற்பாடு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்போவதுமில்லை. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்போவதுமில்லை.

எனவே இது எந்வொரு பிரயோசனமும் இல்லாமலே இருக்கப்போகின்றது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கக் கூடியவர்கள் தமிழ் மக்களுக்கு போரினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவோ, அபிவிருத்தி தொடர்பாகவோ எந்தவொரு நிபந்தனைகளும் விதிக்காமல் அரசாங்கத்துக்கு பாதுகாப்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் மக்களின் நலன் சார்ந்த நிபந்தனைகளை முன்வைக்காமல் அதற்கு பிற்பாடு நாடாளுமனறத்தில் பேசுவதால் எந்தப் பயனுமில்லை” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.