பெண்களுக்கு ஓட்டை வாய்! ஸ்டாலின் பேச்சால் விளைந்த விபரீதம்!!

0

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில தினங்களாக திமுக சார்பில் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென கூறி, அவரே சில ஊராட்சி சபை கூட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார். ஆனால், கடந்த காலங்களில் ஆட்சி – அதிகாரத்தில் இருந்த சமயத்தில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இப்போது செய்வதெல்லாம், தேர்தலுக்கான வேடமா? என திமுகவினர் நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்களை விமர்சிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் – ஆரூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், “பெண்களால் சிறிது நேரம் கூட பேசாமல் இருக்க முடியாது. ஊர் கதை, உலக கதையென எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் அமைதியாக இருந்தால் தான் நிகழ்ச்சியை விரைவாக முடிக்க முடியுமென” தெரிவித்தார்.

ஸ்டாலினின் இத்தகைய பேசினால் அதிருப்தியடைந்த அங்கு குழுமியிருந்த பெண்களும்,பொதுமக்களும் நாங்களாகாவா இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்தோம்? எங்களை அழைத்துவந்ததும் இல்லாமல், ஏதேனும் குறைகளை சொல்ல முற்பட்டால் இப்படியா பெண்கள் குறித்து பேசுவது என ஸ்டாலினை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.