தமிழ்நாட்டில் மகனை கொலை செய்த கள்ளக் காதலன் ! ஒன்பது மாதங்கள் கழித்து பழி வாங்கிய காதலி !

0

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ரித்தேஷ் சாய் என்ற 10 வயது மகன் இருக்கிறான். மஞ்சுளா சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த குடும்பத்தினருடன் நாகராஜ் என்பவர் நல்ல நண்பர்போல பழகி வந்துள்ளார்.

இதனிடையே நாகராஜும் மஞ்சுளாவும் நெருங்கிப் பழகியுள்ளனர். இதனால் தகவலறிந்து அதிர்ச்சியான கணவர் கார்த்திகேயன் அவர்களை கண்டித்துள்ளார்.

மேலும் இதனிடையே நடந்த இந்த பிரச்சினையால் கோபமடைந்த நாகராஜ், கார்த்திகேயன், மஞ்சுளாவின் மகனான ரித்தேஷ் சாய் சிறுவனை கடத்தி சென்று அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அடித்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் நாகராஜை பொலிசார் கைது செய்தனர்.

மிகப் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் கடந்த 9 மாதங்களாகச் சிறையில் இருந்த நாகராஜ் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் திருவண்ணாமலையில் உள்ள செல்போன் கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நாகராஜ் கடந்த 29 ஆம் திகதி அன்று கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். தகவலறிந்த பொலிசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளன.

அதில் ரித்தேஷ் சாய் கொலை செய்யப்பட்ட பிறகு கணவர் கார்த்திகேயனை விட்டுப் பிரிந்த மஞ்சுளா, சைதாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். தன்னிடம் நல்லவன் போல் பழகி தனது பெயரைக் கெடுத்தது மட்டுமல்லாமல், அன்பு மகனையும் கொன்று விட்டானே என மஞ்சுளா உள்ளத்தில் பழி வாங்கும் எண்ணம் மேலோங்கியது.

இதையடுத்து நாகராஜனை கொலை செய்ய மஞ்சுளா திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தனது நண்பர்களிடம் துப்பாக்கி வாங்கி வர சொன்னார். ஆனால் அவர்கள் மஞ்சுளாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பொம்மைத் துப்பாக்கியை வாங்கித் தந்து விட்டனர்.

இந்தச் சம்பவத்தில் மஞ்சுளா மற்றும் அவரின் நண்பர்களை சைதாப்பேட்டை பொலிசார் கைது செய்தனர். அப்போது மஞ்சுளாவிடம் பொலிசார் விசாரித்தபோது என் மகனைக் கொலை செய்த நாகராஜை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்தச் சபதத்தை 9 மாதங்களுக்குப் பிறகு நாகராஜ் ஜாமீனில் வெளியில் வந்தும் அவரை கூலிப்படை உதவியுடன் மஞ்சுளா கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து தனது பழி தீர்த்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.