மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் திருமணத்தில் இடம்பெற்ற சில விசேட தகவல்கள் ! படங்கள் உள்ளே

0

நேற்று நடந்த மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோகித்த மற்றும் டட்யானா ஆகியோரது திருமணத்தில் சில விசேட தகவல்கள் இதோ !

 1. இன்றைய திருமணத்துக்கு 5000 பேருக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டன.
 2. இன்றைய திருமணம் மகிந்த வாழும் இடமான அம்பாந்தோட்டை வீரகெட்டியவில் நடந்தது. அதுவும் ஆடம்பரம் அற்ற விதத்தில் நடந்தது.
 3. இன்று பரிமாறப்பட்ட உணவுகளில் மாமிச உணவு கிடையாது. மது வகைகள் பரிமாறப்படவில்லை. அத்தனை உணவையும் ஊர்க்காரர்களே சிங்கள பாராம்பரிய சைவ உணவாகவே தயாரித்து கொடுத்தார்கள். பானங்கள் கூட இயற்கை பானங்களாகவே கொடுக்கப்பட்டன.
 4. மிக நெருக்கமான ஊர் மக்கள் 12 ஆயிரம் பேர் மாலை விருந்தில் கலந்து கொண்டார்கள்.
 5. இன்றைய திருமண நிகழ்விற்கான கௌரவ அழைப்பாளராக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களே பங்கு கொண்டார்.
 6. திருமண தம்பதிகளது தேனிலவைக் கொண்டாட நுவரெலியாவுக்கு பயணமானார்கள்.
 7. ரோகித்த மற்றும் டட்யானா அவர்களது காதல் ஒரு பாடல் கிளிப் செய்யும் போதே உருவானது.
  அந்த பாடலை எழுதி – பாடியது ரோகித்ததான்
  இதோ : https://youtu.be/jBSh4R3pYoI
 8. ரோகித்த தனது காதலை தன்சானியாவின் கிளிமஞ்சாறோ (Kilimanjaro) எனும் மலையில் வைத்தே சொன்னார்.
 9. மகிந்த குழந்தைகளின் விருப்பங்களை ஏற்று முடிவுகள் எடுப்பவர் மகிந்தவின் மனைவி சிரந்திதான். அவர்தான் மகனின் திருமண பெண்ணை ஓகே செய்துள்ளார். சிரந்தி வீட்டில் பவர்புல் லேடிதான்.

Leave A Reply

Your email address will not be published.