மட்டக்களப்பில் அழகான குழந்தையை வீதியில் கைவிட்ட இரக்கமற்ற தாய் !படங்கள் உள்ளே

0

மட்டக்களப்பு கிரான் வீதியில் கைவிடப்பட்ட இரண்டுமாத குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியோரத்தில் இரண்டு மாதங்கள் மதிக்கத்தக்க குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் குழந்தையை அப்பிரதேச கிராம உத்தியோகஸ்தர் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது யாருடைய குழந்தை? இதனை விட்டுச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியாகாத நிலையில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.