மட்டக்களப்பில் 16 வயது சிறுவன் கொடூரமாக குத்தி கொலை !படங்கள் உள்ளே

0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் இளைஞன் அடித்தும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று(16) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களால் சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் இளைஞன் அடித்தும் கூரிய ஆயுதத்தினால் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மீராவோடை ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து இருவரினால் காட்டுமிராண்டித்தனமாக குறித்த இளைஞன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த இளைஞனை தாக்கிய இரு இளைஞர்களும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஏன் எதற்காக இவ்வாறு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரென்று இதுவரை தெரியாதுள்ளதாக மரணமடைந்த இளைஞனின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த இளைஞனின் உடல் தற்போது பிரேதப்பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளையும், கொலை செய்த இளைஞர்களையும் பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.