மஹிந்த-மைத்திரிக்குள் கடும் மோதல் உருவாகலாம்; கோத்தா பற்றி வெளியான தகவல்!

0

தென்னிலங்கையில் அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு சூடுபிடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

அதனடிப்படையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தோர் கூறிவருகின்றனர்.

ஆனாலும் அடுத்த முறையும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய மூத்த உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ ஆகியோர் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் நிலவுவதாகவும் ஆனாலும் இதனை மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிப்பார் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் யார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடும் இழுபறி நிலை நிலவும் என மற்றொரு தகவல் கூறுகின்றது.

குறிப்பாக கோத்தபாய ராஜபக்‌ஷ வேட்பாளராக நிறுத்தப்படும் சமயத்தில் சுதந்திரக் கட்சியிலுள்ள துமிந்த சில்வா உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினைக் காட்டி வெளியேறக்கூடும் எனவும், மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படும் சமயத்தில் பொதுஜன பெரமுனவிலுள்ள குமார் வெல்லகம முதலானோர் எதிர்ப்புடன் வெளியேறகூடும் எனவும் அரசியல் அவதானிகள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தில் கடும் இழுபறி நிலையொன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்குள் தோன்றுவது தவிர்க்கமுடியாததொன்றகும் என்றே பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.