மாணவிகளிடம் சேட்டைவிட்ட இளைஞர்கள்! நையப்புடைத்த மக்கள் ! மட்டக்களப்பில் இன்று மாலை நடந்த சம்பவம்

0

பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் மாணவிகள் மீது அநாகரிகமான முறையில் ஒரு கும்பல் மிக நிண்ட காலமாக நடந்துகொண்டு வந்து பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு மாணவிகள் மீது அவதூறாக நடக்க முற்படுகையில் அக்கும்பலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

இன்று மாலை இந்த நையப்புடைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

பின்னர், மாணவிகள் மீது அவதூறாக செயற்பட்ட 4 பேர் கொண்ட அக்கும்பலை அப்பகுதி பொதுமக்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொலிஸார் 4 பேருக்கும் எச்சரிக்கை விடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம சேவகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை வழங்கி, இளைஞர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி விட்டு கிராம சேவை உத்தியோகஸ்த்தர் அவர்களை பெற்றோரிடம் அனுப்பி வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.