மாரத்தான் இன்னிங்ஸ் விளையாட இவர்தான் முக்கிய காரணம் என்கிறார் புஜாரா

0

நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹார்ட்தான் முக்கிய காரணம் என புஜாரா தெரிவித்துள்ளார். #Pujara

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்திய டெஸ்ட் அணியின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் ஆன புஜாரா வெளிநாட்டு மண்ணில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது.

ஆனால் இந்த தொடரில் தனது பேட்டால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 7 இன்னிங்சில் மூன்று சதங்கள், ஒரு அரைசதம் விளாசியுள்ளார். மூன்று முறை 300 பந்துகளுக்கு மேல் சந்தித்து ஆஸ்திரேலிய பவுலர்களை வெறுப்படையச் செய்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட பிசியோதான் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். பேட்ரிக் பர்ஹார்ட் குறித்து புஜாரா தனது டுவிட்டர் பகுதியில் ‘‘இந்த மனிதர் அவரது குடும்பத்தை விட கடந்த மாதம் என்னுடன்தான் அதிக நாள் செலவிட்டுள்ளார். உங்களுடைய எல்லா உதவிகளுக்கும் நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.