மைத்திரியின் அதிரடி: வடக்கின் ஆளுநராக தமிழர் நியமனம்! யார் சுரேன் ராகவன்?

0

வடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கின் ஆளுநராக நியமனமானார்.

இதேவேளை வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன், பெயரளவில் மாத்திரமே தமிழர் என்றும், அவரது வாழ்க்கை, ஆய்வு, அரசியல் ஈடுபாடு யாவும் சிங்கள அரசுக்கு சார்பானது என்று தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள தேசியம், புத்தம், பௌத்தம் பற்றிய ஆய்வுகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேனவின் ஊடக பிரிவு தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாளர் என்றும் கூறப்படுகின்றது.

யார் சுரேன் ராகவன்..??

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேஷ் ராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார்.

2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற இவர் 2008ஆம் ஆண்டு முதுகலைமாணி முடித்தார் பின்னர் 2008-2011 களில் பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் அவருக்கு வழங்கப்பட்டது.

கனடா – ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினை வென்ற அவர் நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலியாவார். இவர் தற்போது ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார்.

அத்தோடு அவர் மிக முக்கியமாக அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதியாவார், பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான ஆளுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் ஆளுநராக கீர்த்தி தென்னக்கோனும் சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக தம்ம திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.