யாழில் கொள்ளை – பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸாரின் தீவிர விசாரணையில் சந்தேகநபர்கள்!

0

பதின்ம வயது சிறுமி மீது கொள்ளையர்கள் மேற்கொண்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நான்கு பேரை காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் தமது பாதுகாப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் இடம்பெற்று 6 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட இவர்கள், நால்வரையும் மல்லாகம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் தரப்பில் இருந்து வெளியாகிய தகவல்களின் அடிப்படையில், தெல்லிப்பழையைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் (வயது 28), ஏழாலையைச் சேர்ந்த இராஜகோபால் கிருஷ்ணகுமார் (வயது 30) ஆகியோர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாதேவன் ரூபன் மற்றும் இராஜகோபால் கிருஷ்ணகுமார் ஆகியோரே  சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் வலி.வடக்கில் வீடு புகுந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

சம்பவ தினத்தன்று, வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டதுடன், வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு  தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.