யாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்!

0வீதியில் பயணித்தவர் திடீரென எச்சில் துப்பியதில் அருகில் வந்தவர் மீது எச்சில் பட்டதால் ஆத்திரமடைந்த நபர் எச்சில் துப்பியவரை ஏரிக்குள் தள்ளிவிட்டு தாக்கிய சம்பவம் நேற்று யாழ் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

காக்கைதீவில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி நபர் ஒருவர் நேற்று முற்பகல்வேளை உந்துருளியில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்னால் உந்துருளியில் சென்ற நபர் திடீரென்று தனது பக்கவாட்டில் துப்பியுள்ளார்.

பின்னால் சென்றவர் ஹெல்மட் கண்ணாடியை மூடாமல் சென்றதால் அவரின் முகத்தை அந்த எச்சில் பதம்பார்துவிட்டது. இதனால் ஆத்திரமும் ஆற்றாமையும் அடைந்த நபர் முன்னால் சென்றவரின் உந்துருளியின் பின்பக்கம் மோதியுள்ளார்.

சடுதியில் நிலைகுலைந்த முன்னால் சென்றவர், அருகல் உள்ள ஏரிக்குள் விழுந்துவிட்டார். துப்பு வாங்கியவரும் அந்த இடத்தில் சண்டித்தனத்துக்காக இறங்கிவிட்டார். ஏரிக்குள் விழுந்தவர் விழுந்த உடனேயே சேற்றை அள்ளி அவர்மீது எறிந்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஏரிக்குள் விழுந்து உருண்டு புரண்டு கடுமையாக சண்டை பிடித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் வீதியால் சென்றவர்கள் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி மோதலை தீர்த்துவைத்தனர்.

இதேவேளை உந்துருளியில் செல்லும்போது பின்னால் வருபவர்களைப் பொருட்படுத்தாது துப்பும் சம்பவங்கள் யாழில் அதிகரித்திருப்பதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.