யாழ்பாணத்தில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி ! அதிர்ச்சி சம்பவம் ! நடந்தது என்ன ?

0

யாழ்ப்பாணத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் நேற்றிரவு அண்ணன் – தம்பி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளனது.

இதன்போது தம்பியின் தாக்குதலுக்கு இலக்காக அண்ணனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பண கொடுக்கல் வாங்கல் விவகாரமே கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயது சிறிரங்கநாதன் சுதாகரன் என்பவரே உயிரிழந்தார்.

அண்ணன் தம்பிக்கு இடையில் வாய்த்தா்க்கம் இடம்பெற்றதென்றும் அது கைகலப்பாக மாறி கொட்டனால் அடிக்கப்பட்டதால் கொலையில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.