ரஷ்ய அழகிக்காக தனது பதவியை துறந்த மலேசிய மன்னர் ! நடந்தது என்ன ?

0

49 வயதான சுல்தான் முகமது ரஷ்யாவைச் சேர்ந்த ‘மிஸ் மாஸ்கோ’ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினா (Oksana Voevodina) என்ற 25 வயதுப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி வெளியானது.

இந்தச் செய்தி பரவியதும் சுல்தான் முகமது தன் மன்னர் பட்டத்தைத் துறப்பார் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் மன்னர் பதவியிலிருந்து விலகியுள்ளார். மலேசிய மன்னரின் அரண்மனையும் இதனை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.

மலேசியாவில் மன்னர் ஆட்சியில் கூட்டாட்சி முறையில் அரசு இயங்குகிறது. அந்நாட்டின் 15 ஆம் மன்னராக சுல்தான் முகமது 2016ஆம் முடி சூடினார்.அவர் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதீர் பின் முகமது அந் நாட்டின் பிரதமராக உள்ளார்.

உடல்நலக்குறைவு காரணாக அரசில் தன் வேலையைச் செய்யாமல் தட்டிக்கழித்து வந்துள்ளார் மன்னர் சுல்தான் முகமது.

இந்நிலையில் 49 வயதான இவர் ரஷ்யாவைச் சேர்ந்த ‘மிஸ் மாஸ்கோ’ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினா (Oksana Voevodina) என்ற 25 வயது பெண்ணை காதலித்தார் எனவும், கடந்த நவம்பர் 2017 ஆம் ஆண்டில் அவரைத திருமணம் செய்துகொண்டார் எனவும் வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியானது.

இதேவேளை, மலேசிய மன்னரின் அரண்மனை அறிவிப்பில் சுல்தான் முகமது பதவி விலகக் காரணம் கூறப்படவில்லை என்றாலும் காதல் திருமணம்தான் காரணமாகவிருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.