ராமதாஸ் அதிமுக!அன்புமணி டிடிவி!!

0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள் அணி சேரத்தொடங்கிவிட்டன. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகள் ஆகியவை இணைந்துள்ள நிலையில் அந்த அணிக்கு மாற்றானதோர் வலுவான அணியை அமைத்திட முயலுகிறது பாஜகவின் தலைமை.

வெறுமனே அதிமுக – பாஜக இணைந்தால் அந்த கூட்டணி செல்லுபடியாகாது என்ற காரணத்தினால் வட மற்றும் தென் மாவட்டங்களில் சாதி வாக்கு வங்கி வலுவாக உள்ள சில கட்சிகளை தங்களது அணியில் இணைக்க நினைக்கிறது பாஜக. அதற்காக வேண்டி பாமக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதில் புதிய தமிழகமும், புரட்சி பாரதமும் பாஜக கூட்டணியில் இணைந்தே விட்டன எனலாம்.

அதே சமயம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பிலுள்ள பாஜக – அதிமுக மீது தமிழகத்தில் கடுமையான அதிருப்தியலை நிலவுகிறது. இந்த நேரத்தில் அவர்களுடன் நாம் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் கடுமையான வீழ்ச்சியினை சந்திக்க நேரிடுமென பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி கருதுவதுடன், ஆர்.கே நகர் தொடங்கி தனது அமைப்புக்கு பலம் சேர்த்து வருகிற தினகரனுடன் இணையலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது துவக்கப்பட்டு தங்களாலேயே அதிகப்படியான விமர்சனங்களை முன்வைக்கப்பட்ட தினகரனுடன் கூட்டு சேர்வதனை விடவும், அதிமுக – பாஜக கூட்டணியே சரியானதாக இருக்குமென கருதுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் என்கின்றன அவரது கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள்.

இதில், கவனிக்கப்பட வேண்டியது திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டுமென இரு கட்சியிலுமே சில தலைவர்கள் விரும்ப பாமக இருக்கும் அணியில் நாங்கள் ஒருபோதும் இடம்பெற மாட்டோம் என திருமா வெளிப்படையாக அறிவித்ததன் காரணத்தினாலேயே அந்த விருப்பம் செயற்படுத்த முடியாததாய் ஆகிப்போனது என்பதுதான். இல்லாவிடில், ஸ்டாலினுடன் ஒரே மேடையில் தோன்றினாலும் தோன்றியிருப்பார் ராமதாஸ்.

Leave A Reply

Your email address will not be published.