வடக்கு தமிழ் அரசியல்வாதிகளை வெட்கி தலைகுனிய வைத்த சிங்கள அமைச்சர் ! ஆஹா மக்கள் பிரதிநிதி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்

0

நேற்று மதியம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வாழ்வாதார அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் – பாலித தெவரப்பெரும குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

கிளிநொச்சியில் கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தினால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் பிரதி அமைச்சர் தலையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று பரந்தன் பகுதியில் உள்ள கிணறுகளை மாலை வரை துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரதிநிதிகள் எப்படி இருக்க வேண்டுமென தமிழ் தலைவர்கள் பாலித தெவரப்பெருமவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.