வவுனியாவில் மாணவியை கடுமையாக தாக்கிய அதிபர் ! வைத்தியசாலையில் அனுமதி ! நடந்தது என்ன ?

0

வவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது நேற்று முன்தினம் (16.01.219) பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரையில் குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக ஓமந்தை பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தினை காணவில்லையென தெரிவித்து எனது பிள்ளையினை அதிபர் தனது அறையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் இதுவரையில் ஓமந்தை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் எனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளது.

ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் தான் எனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமென தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.