வவுனியா நகரில் இரகசிய கமராவுடன் இளைஞர் யுவதிகள்! அதிர்ச்சியில் வர்த்தகர்கள் ! காரணம் என்ன ?

0

வவுனியா நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் பெண்களுடன் அங்கிருக்கும் சில ஆண்கள், இரட்டை அர்த்த சொற்களை பிரயோகிக்கின்றமை, தகாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளிக்கொணரப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில இளைஞர், யுவதிகள் இணைந்து இரகசிய கமராக்கள் சகிதம் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று, பொருட்களை கொள்வனவு செய்வதுடன், எவரேனும் பெண்களுடன் இரட்டை அர்த்த வசனங்களையோ அல்லது பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாட்டிலோ ஈடுபடுகின்றனரா எனவும் கண்காணிக்கின்றனர்.

இச்செயற்பாட்டிற்கு சில குடும்ப பெண்களின் உதவியையும் இளைஞர்கள் வட்டம் கோரியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் குடும்ப பெண்களும் இரகசிய கமராக்கள் மூலம் இச்செயற்பாட்டை கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.